வவுனியாவில் இடம்பெற்ற அரசாங்கத்தின் தேசிய தீபாவளி நிகழ்வு!
Nov13
வவுனியாவில் இடம்பெற்ற அரசாங்கத்தின் தேசிய தீபாவளி நிகழ்வு!
அரசாங்கத்தின் தேசிய தீபாவளி நிகழ்வு வவுனியாவில் இன்று (12.11) மாலை இடம்பெற்றது.
வவுனியா, கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து குறித்த நிகழ்வு கந்தசாமி ஆலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
கந்தசாமி ஆலயத்தில் மேளதாளம் முழங்க விசேட பூஜை வழிபாடு இடம்பெற்று, அங்கிருந்து இறைவனின் திருவுருவச் சிலையுடன் அதிதிகள் அழைத்து செல்லப்பட்டதுடன், மண்டபத்தில் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நாட்டிய, நடன, நாடக நிகழ்வுகள் இடம்பெற்றன.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட வாழ்த்துச் செய்து வாசிக்கப்பட்டதுடன், இந்து காலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடமாகாண பிரதம செயலாளர் சமன்பந்துல சேன, தபால் அத்தியட்சகர் றுவான் சரத்குமார, மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், ஆலய நிர்வாகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy