வவுனியா வெங்கல செட்டிக்குள பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா
Nov09
வவுனியா வெங்கல செட்டிக்குள பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா
வவுனியா வெங்கல செட்டிக்குள பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா இன்றைய தினம் செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
வடமாகண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகமும் கலாசாரப்பேரவையும் இணைந்து நடாத்திய இந்நிகழ்வானது செட்டிகுளம் பிரதேச செயலாளர் சுலோஜினி குகன் தலைமையில் இடம்பெற்றதது.
செட்டிகுளம் விதாதா வளநிலையத்திலிருந்து மேளதாள வாத்தியம் காவடியாட்டம் கோலட்டம் விவசாயத்தை பிரதிபலிக்கும் வகையிலும் பிரதேச பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலும் ஊர்வலம் இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பீ.ஏ சரத் சந்நதிர செட்டிகுளம் மகாவித்தியாலத்தின் அதிபர் தயாபரன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பிரதேச கலைஞர்களின் கலைநிகழ்வுகளும் கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக வெங்கல ஜோதி விருதும் வழங்கிவைக்கப்பட்டது.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy